சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரையிலேயே பயணம் செய்த நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் . மேலும்,நாடக நடிகை பூர்ணிமாவின் மகள் தான் நடிகை சந்தோஷி. மேலும்,நடிகை சந்தோஷி தன்னுடைய எட்டு வயது இருக்கும் போதே தன்னுடைய அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும்,இவர் பாபா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகை சந்தோஷி பாலா, மாறன், ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் என பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : இணையத்தில் வைரலான ‘வாத்தியார்’ மீம்ஸ் குறித்து பசுபதி போட்ட பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.
மேலும்,இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் என இரு மொழி படங்களில் கூட நடித்து உள்ளார்.இவர் சன் டிவியில் ஓளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, நம்பர் 23 ,மகாலட்சுமி என பல தொடர்களில் நடித்து உள்ளார்.
நடிகை சந்தோஷி நிறைய பியூட்டி(அழகு) போட்டிகள் கூட செய்கிறார்கள். மேலும், இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக தற்போது வைத்து உள்ளார். சந்தோஷிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெட்டை பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தனது பிரசவத்தின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து உள்ளார் சந்தோஷி.