மீரா சூப்பர் மாடலா.! அவர் சொன்ன கதை உண்மையா.? சூப்பர் மாடல் என்றால் என்ன.?ஆதாரம் இதோ.!

0
1891
Meera-Mithun
- Advertisement -

மீரா மிதுன் மற்றும் அபிராமிக்கும் இடையேயான சண்டை தான் கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மீரா மிதுனும், அபிராமியும் ஒரு வழியாக சமாதானம் ஆகினர். இந்த சம்பத்திற்கு பின்னர் ரேஷ்மாவும், மீராவும் பேசிக்கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

அப்போது சூப்பர் மாடல் என்றால் என்ன என்பதை ரேஷ்மாவிற்கு விளக்கிக்கொண்டிருந்தார் மீரா, தான் ஒரு சூப்பர் மாடல் என்று கூறியிருந்தார். அதற்கு ரேஷ்மா மாடல் மற்றும் சூப்பர் மாடலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்டார். அதற்கு மீரா மீதுன், பியூடி பேஜன்ட் பட்டம் வென்றாலே சூப்பர் மாடல் என்று கூறியிருந்தார். நான் இந்தியாவில் கிங் பிசர் சார்பாக பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

- Advertisement -

உண்மையில் சூப்பர் மாடல் என்றால் என்ன? உண்மையில் மீரா மிதுன் சூப்பர் மாடல் தானா என்பதை ஆராய்ந்த போது அது முற்றிலும் பொய் என்று தெரியவந்துள்ளது. மீரா ஒரு பியூடி பேஜன்ட் மற்றும் மாடல் மட்டும் தான். மாடல் என்றால் சொந்த நாட்டில் நடக்கும் பேஷன் ஷோக்களில் பங்குபெறவர்கள் மட்டும் தான்.

ஆனால், சூப்பர் மாடல் என்றால் சர்வதேச அளவில் உலகின் தலை சிறந்த ஆடை வடிவமைப்பாளராகள், ஒப்பனையாளர்கள் பங்குபெறும் பேஷன் ஷோக்களில் பங்குபெறுவார்கள். ஆனால், மீரா மிதுன், அப்படி எந்த ஒரு சரவதேச அளவிலான பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டதே கிடையாது. அவர் இந்தியாவை தவிர எந்த ஒரு நாட்டிற்கும் சென்று பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டது இல்லை.

-விளம்பரம்-

மேலும், சூப்பர் மாடல்கள், பில்லியன் கணக்கில், அதாவது இந்திய மதிப்பில் பல கோடிகளில் சம்பாதிப்பார்கள். அப்படி பாரத்தால் மீரா சூப்பர் மாடல் என்றால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. அதே போல லட்ச கணக்கில் பண மோசடியில் ஈடுபடவேண்டிய அவசியமும் இல்லை. இதிலிருந்தே அவர் சூப்பர் மாடல் இல்லை என்பதும் அவர் சொல்வது முற்றிலும் பொய் என்பது ஆணித்தனமாக சொல்ல முடியும்.

Advertisement