ஐயகோ மீரா மிதுனின் ஊழல் தடுப்பு அதிகாரி பதவி பறிக்கப்பட்டது. கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 14/12/2019

பிக்பாஸ் மீரா மிதுன் ஒரு மத்திய அரசாங்க அதிகாரியா? என்று மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன நெட்டிசன்கள். நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே எல்லாருமே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஏன்னா, அந்த அளவிற்கு நடிகை மீரா மிதுன் மீது பிரச்சனைகள் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவரை 'சர்ச்சை நாயகி' என்றும் சொல்லலாம்.

https://twitter.com/meera_mitun/status/1205544519229267968

அதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் தற்போது அனைவரும் வியக்கும் அளவிற்கு மீரா மிதுன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் மீரா மிதுன் தமிழ்நாடு ஸ்டேட் anti-corruption கமிஷனில் உள்ளார் என்று தெரிகிறது. அதாவது இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி மீரா மிதுன் தமிழகத்தின் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐடி கார்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இது குறித்து மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது," இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : என்ன கவின் ? இத லாஸ்லியா பாத்தா பிரச்சனை ஆகாதா ? புலம்பும் ஆர்மி.

அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? பொய்யா?என்ற குழப்பத்தில் உள்ள போது ஒரு தகவல் கிடைத்து உள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவுகளின் லோகோ வேறு, மீரா மிதுன் வெளியிட்ட ஆதாரத்தில் இருக்கும் லோகோ வேறு என குறிப்பிட்டிருந்தனர். மீரா மிதுன் பதிவில் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அது கடிதத்தில் "Volunteer Basis ” என குறிப்பிட்டு இருந்தது. அந்த கடிதத்தில் இரண்டாவது வரிசையில் பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக கூறும் “Anti Corruption Commission ” மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இல்லை. இது ஒரு தன்னார்வ விசாரணை ஏஜென்சி. அதாவது "N G O" அமைப்பின் anti-corruption கமிஷன் உடையது என்று குறிப்பிட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1205720777099632640

இருப்பினும் மீரா மிதுன், தான் ஊழல் தடுப்பு துறையின் அதிகாரி தான் என்று ஆணித்தமனாக கூறிவந்தார்.மேலும், இது குறித்து ஓவர் ஆட்டம் போட்டு வந்தார். இந்த நிலையில் மீரா மிதுனின் பதவி பறிக்கபட்டுள்ளதாக இணையத்தில் ஊழல் தடுப்பு துறையின் அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது. இதனை கண்ட மீரா மிதுன் ஷாக்கடைந்து இதற்கு பின் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார். மேலும், அந்த கடிதத்தில் 'இனி ஊழல் தடுப்பு அதிகாரி என்று சொல்லிக்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபட கூடாது ' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க மீரா மிதுனின் முகத்திரையை தொடர்ந்து கிழித்து வரும் ஜோ மைக்கேல் தான், மீரா மிதுனுக்கு எதிராக இப்படி செய்து அவரது பதிவியை இழக்க செய்ததாக ட்விட்டரில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full