என்ன கவின் ? இத லாஸ்லியா பாத்தா பிரச்சனை ஆகாதா ? புலம்பும் ஆர்மி.

0
46799
kavin-losliya

சரவணன் மீனாட்சி சீரியலின் ‘வேட்டையனை’ தெரியாதவர்கள் யாராவது இருப்பாங்களா??? அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் முதன் முதலாக ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் டிவி தொடர்களில் நடிப்பதும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் மக்களிடையே பிரபலமானார். மேலும், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையின் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது என்று சொல்லலாம். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோவானார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. பின்பு தான் கவின் அவர்கள் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

kavin-losliya

இந்த நிகழ்ச்சியில் தான் கவின் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் குறித்து பல சர்ச்சைகள், கலவரங்கள், காதல்கள் எழுந்தது என்று சொல்லலாம். காதல் ரோமியோவாக வலம் வர வேண்டும் என்று உள்ளே நுழைந்த கவினுக்கு பயங்கர பிரச்சனைகள் ஏற்பட்டது. சாக்சி, அபிராமி போன்று பல பேரிடம் சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் ஒரு வழியாக கவினுக்கு லாஸ்லியா உடன் காதல் ஏற்பட்டது. லாஸ்லியா– கவின் காதல் காவியமாக இருந்தது என்று சொல்லலாம். மேலும், அவர்களை விட அவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகமாக இவர்கள் சேர வேண்டும் என விரும்பி வருகிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பின் கூட இவர்களுடைய காதல் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இதையும் பாருங்க : இதுக்குமேல இறக்க முடியாது. தாராளம் காட்டிய யாஷிகா. போதும் போதும்னு குதிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அவர்கள் காதலிப்பது குறித்துக் கூட எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இதனால் கவிலியா ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறி இருந்தார்கள். இந்நிலையில் கவின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் லாஸ்லியாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்??? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் தான் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அப்படி என்ன தான் ட்விட்டர்ல போட்டார்னு பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் திரை உலகிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்லலாம். இவர் முதன் முதலாக பிரசாந்த்– சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தார்.

அதற்கு பின்னர் மௌனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியாக ஆனார். ஆனால், அந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு மனசெல்லாம் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் மனம் தளர விடாமல் விக்ரம் உடன் சேர்ந்து சாமி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்று சொல்லலாம். மேலும், மௌனம் பேசியதே படத்தில் இருந்து நடிகை திரிஷா அவர்கள் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பட்டைய கிளப்பி கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் சினிமா பயணத்தை குறித்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். அதோடு நாங்கள் எப்போதுமே திரிஷா கட்சி தான் என்றும், வேற லெவல் திரிஷா என பாராட்டியும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், திரிஷா அவர்கள் தன் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தார்கள். இப்படி ரசிகர்கள் திரிஷாவை கொண்டாடி போஸ்டர் போட்டதைப் பார்த்து திரிஷா ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்த நம்ப பிக்பாஸ் 3 நாயகன் கவின் ஆமாங்க, நான் எப்பொழுதும் த்ரிஷா கட்சி தான் என்று ட்விட் செய்துள்ளார். இதை பார்த்த கவிலியா ஆதரவாளர்கள் ‘லாஸ்லியா இதை பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா?? அவர் கோபப்பட மாட்டாரா?? என்று கேள்வி எழுப்பினார். அதோடு சில ரசிகர்கள் நீங்கள் எப்போ திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? உங்கள் காதல் குறித்து எந்த தகவலும் வரவில்லை என பல கேள்விகளை எழுப்பி வருக்கின்றன.

Advertisement