பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் குறித்து அனைவரும் வியக்கும் அளவிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் ஒன்று வெளியானது . அது என்னவென்றால் மீரா மிதுன் தமிழ்நாடு மாநிலத்தின் anti-corruption கமிஷனில் அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார் என்பது தான். அதாவது இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாதாக அவரே கூறி இருந்தார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி மீரா மிதுன் தமிழகத்தின் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐடி கார்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

இதனை கண்ட பலரும் மத்திய மற்றும் மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவுகளின் லோகோ வேறு, மீரா மிதுன் வெளியிட்ட ஆதாரத்தில் இருக்கும் லோகோ வேறு என குறிப்பிட்டிருந்தனர். மீரா மிதுன் பதிவில் ஒருவர் கமெண்ட் செய்த சிலர் அந்த கடிதத்தில் “Volunteer Basis ” என குறிப்பிட்டு இருந்தது. அந்த கடிதத்தில் இரண்டாவது வரிசையில் பாருங்கள் என்றும் கூறியிருந்தார்கள். மேலும், தமிழகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக கூறும் “Anti Corruption Commission ” மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இல்லை. இது ஒரு தன்னார்வ விசாரணை ஏஜென்சி. அதாவது “N G O” அமைப்பின் anti-corruption கமிஷன் உடையது என்று குறிப்பிட்டிருந்தது.

இதையும் பாருங்க : ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் சேர்க்கப்பட்ட புதிய தமிழ் வார்த்தை. இதை தான் காஜல் அடிக்கடி பயன்படுத்துவாராம்.

Advertisement

இருப்பினும் மீரா மிதுன், தான் ஊழல் தடுப்பு துறையின் அதிகாரி தான் என்று ஆணித்தமனாக கூறிவந்தார்.மேலும், இது குறித்து ஓவர் ஆட்டம் போட்டு வந்தார். இந்த நிலையில் மீரா மிதுனின் பதவி பறிக்கபட்டுள்ளதாக இணையத்தில் ஊழல் தடுப்பு துறையின் அறிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது. இதனை கண்ட மீரா மிதுன் ஷாக்கடைந்து. நான் நீக்கப்படவில்லை என்றும் எனக்கு இன்னும் எந்த கடிதமும் வரவில்லை என்றும் இப்படி போலியான கடிதத்தை வெளியிட்டது யார் என்றும் இதற்கு பின் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் மீரா மிதுனின் பதவி பறிக்கப்பட்டது உண்மை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மீரா மிதுன் பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மீரா மிதுன் வகித்து வந்த பதவியில்  திருச்சியைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர்நியமிக்க ப் பட்டுள்ளார். எனவே, மீரா மிதுன் ஊழல் தடுப்பு அதிகாரியா இல்லையா என்று பலருக்கும் சந்தேகம் நிலவி வந்தது. ஆனால், மீரா மிதுன் தற்போதும் தான் ஒரு ஊழல் தடுப்பு அதிகாரி என்று தான் குறிக்கொண்டு வருகிறார். இதன் மூலம் மீரா மிதுனின் சாயம் மீண்டும் வெளுத்துள்ளது.

Advertisement

Advertisement