ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் சேர்க்கப்பட்ட புதிய தமிழ் வார்த்தை. இதை தான் காஜல் அடிக்கடி பயன்படுத்துவாராம்.

0
9153
kajal-aggarwal
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ எனும் ஹிந்தி படத்தின் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் நடிகை காஜல் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த ‘பழனி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால், இவர் ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா என்ற படத்தின் மூலம் தான் மக்களிடையே மிகப் பிரபலமாக பேசப்பட்டார். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
oxford

- Advertisement -

பின்னர் விஜய் ,அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளார். சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் படம் அவ்வளவுவாக வெளி வரவில்லை. தமிழில் இந்த வருடம் மட்டும் இவர் ஒரே ஒரு படம் தான் நடித்து உள்ளார். அதுவும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து உள்ளார். காஜல் அகர்வால் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு தமிழ் வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் காஜலுக்கு வாழ்த்துகளையும், இணையங்களில் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு தமிழில் சரளமாக பேச தெரியாது. ஆனால், தமிழ் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் “அய்யோ” என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டு உள்ள பதிவினை வெளியிட்டு உள்ளார். மேலும், நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “அய்யோ”. இந்த வார்த்தையை தற்போது ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்த்து உள்ளார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். “அய்யோ” என்ற வார்த்தைக்கு அர்த்தம் மனிதர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை என்று குறிப்பிட்டு உள்ளது.

-விளம்பரம்-
Image result for kajal aggarwal indian 2

மேலும், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் மகிழ்ச்சி, வலி, பயம், சோகம், ஆச்சரியம், துக்கம் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த “அய்யோ” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து உள்ளார்கள். தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்றும் அறிவித்து உள்ளார்கள். சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த “குயின்” திரைப் சூப்பர் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement