அந்தரங்க ஆதாரம். பிரபல இளம் இயக்குனரை மிரட்டி 15 லட்சத்தை பறித்தாரா மீரா மிதுன் ?

0
1369
meeramithun
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் விமர்சித்து ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதிலும் விஜய் மற்றும் சூர்யாவை டார்கெட் செய்து இவர் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரபல யூடுயூப் சேனலான வலைப்பேச்சு சேனலில் மீரா மிதுன் இயக்குனரை மிரட்டி 15 லட்சம் பணம் பறித்துள்ளதாக கூறி உள்ளனர்.

வீடியோவில் 9 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது ‘மீரா மிதுன் குணம் பற்றி அனைவருக்கும் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் சில இயக்குனர்கள் மீரா மிதுனை ஒரு வளர்ந்து வரும் நடிகை என்று நினைத்து அவரிடம் போனில் அன்பு செலுத்தி பேசி உள்ளனர். அப்படி ஒரு இளம் இயக்குனர் மீரா மிதுன் உடன் பேசிய போது அதனை ரெகார்ட் செய்துள்ளார் மீராமிதுன். பின்னர் சமீபத்தில் அந்த இயக்குனருக்கு ஆடியோவை போட்டுக்காட்டி பயம்புருத்தியுள்ளார். அந்த ஆடியோவை லீக் செய்யாமல் இருக்க அந்த இயக்குனர் 15 லட்சம் கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளனர்

- Advertisement -

வலைப்பேச்சு யூடுயூப் சேனலில் கூறப்படும் இது போன்ற பெரும்பாலான விஷங்கள் உண்மையாக தான் இருக்கும். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் யூடுயூப் சேனலில் போக்கிரி படத்தின் போது விஜய்க்கும் – நெப்போலியனுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறினார்கள். பின்னர் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் நெப்போலியன் அந்த சம்பவம் நடந்தது உண்மை தான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவர்கள் சொன்ன அந்த இளம் இயக்குனர் யார் என்று நெட்டிசன்கள் பலரும் ஆராயத் துடங்கிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்வீட் ஒன்றை செய்திருந்த மீரா மிதுன் ‘சமீபத்தில் மீடியாவில் ஆடியோ ஒன்று வெளியானது. அதை பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை, தமிழ் நாடு மீடியா அந்த பக்கம் பேசும் நபர் யார் என்று கண்டுபிடிப்பார்களா ? நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் விக்னேஷ் சிவன் என்று விக்னேஷ் சிவனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement