தனது பழைய புகைப்படத்தை கேலி செய்த ரசிகர்கள். விஜய்யின் பழைய புகைப்படத்தை வெளியீட்டு பங்கம் செய்த மீரா மிதுன்.

0
6199
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் சர்ச்சைக்குரிய நபராக பேசப்பட்டு வருபவர் மீராமிதுன் நடிகையும் மாடல் அழகியுமான இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது பிரபலத்தை சம்பாதிக்கலாம் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிய மீராமிதுன் இறுதியில் ரசிகர்களின் மத்தியில் அவப்பெயரோடு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் பிரபலத்தை பெற என்னென்னவோ சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறார் ஆனாலும் இவருக்கு பிரபலம் கிடைத்தபாடில்லை.

-விளம்பரம்-

இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களை பற்றி சமூக வலைத்தளத்தில் சரியான விஷயங்களை பேசி வருகிறார் அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் இவர் சமூக வளைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார் மீனா மிதுன்.

- Advertisement -

மீரா மிதுன் மீது கோபத்தில் இருக்கும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைத்தளத்தில் வறுத்து எடுத்து வருகிறார்கள். அதேபோல மீராமிதுன் பழைய புகைப்படங்களையும் தோண்டி எடுத்து அதனை சமூக தளத்தில் பதிவிட்டு கேலி செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீராமிதுன் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மீரா மிதுன் என்னுடைய கல்லூரி புகைப்படங்களை கேலி செய்யும் நபர்கள் விஜயின் இந்த புகைப்படத்தை பாருங்கள். அனைவருமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் வித்தியாசமாக தான் இருப்பார்கள். ஆனால், நான் ஃபேஷன் துறையில் வந்தபோது சரியான தோற்றத்தில்தான் களமிறங்கினேன். ஆனால், விஜய் தனது முதல் படத்தில் நடித்தபோது மீடியாக்கள் என்ன எழுதியது என்பது அனைவருக்கும் தெரியும். அதை நான் வெளியிடட்டுமா என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement