இந்த புகைப்படத்தை விடுங்க, சூப்பர் மாடல் மீரா மிதுனின் ஒட்டர் ஐடில எப்படி இருக்கார் பாருங்க.

0
2130
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் சர்ச்சைக்குரிய நபராக பேசப்பட்டு வருபவர் மீராமிதுன் நடிகையும் மாடல் அழகியுமான இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது பிரபலத்தை சம்பாதிக்கலாம் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிய மீராமிதுன் இறுதியில் ரசிகர்களின் மத்தியில் அவப்பெயரோடு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் பிரபலத்தை பெற என்னென்னவோ சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறார் ஆனாலும் இவருக்கு பிரபலம் கிடைத்தபாடில்லை.

-விளம்பரம்-

இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களை பற்றி சமூக வலைத்தளத்தில் சரியான விஷயங்களை பேசி வருகிறார் அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் இவர் சமூக வளைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார் மீனா மிதுன்.

- Advertisement -

மீரா மிதுன் மீது கோபத்தில் இருக்கும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைத்தளத்தில் வறுத்து எடுத்து வருகிறார்கள். அதேபோல மீராமிதுன் பழைய புகைப்படங்களையும் தோண்டி எடுத்து அதனை சமூக தளத்தில் பதிவிட்டு கேலி செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீராமிதுன் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ் செல்வி என்ற பெயருடன் இருக்கும் மீரா மிதுன், கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது சூப்பரா மாடல் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் மீராமிதுன் எது என்ற அளவுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement