ஏவிக்ஷனுக்கு பின் சேரனுக்கு எதிராக திட்டம் தீட்டிய மீரா.! வெளியான போன் உரையாடல்.!

0
3273
cheran meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதில் பேசியுள்ள பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

- Advertisement -

அதே போல சேரன் விஷயத்தில் மீரா தான் பொய் சொல்கிறார் என்று கமல் போட்டு காண்பித்த குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருமானமானது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் கூட சேரன் பெயரை கெடுக்க திட்டம் தேடியுள்ளார் மீரா. இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement