லாஸ்லியா ஹேட்டர்ஸ் தான் அவர் வாயை கிண்டல் செய்கிறார்கள் என்றால், முகென் மலாயில் எழுதியே காண்பிச்சிட்டாரு.!

0
17874
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது . இதுவரை 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அதில் 12 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது லாஸ்லியா, முகென், சாண்டி, ஷெரின் என்று 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் சில மணி நேரத்தில் பிக் பாஸ் சீசன் 3 -யின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும் .

-விளம்பரம்-

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 4 போட்டியாளர்களில் முகென் மற்றும் லாஸ்லியா ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத நபர்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில்இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. ஆனால், சமீப காலமாக இவர் செய்து வரும் செயல்களால் கொஞ்சம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இந்தியன் 2- வில் தர்ஷன் நடிப்பது உண்மையா.! கமல் என்ன சொன்னார்.! தர்ஷன் நண்பர் பேட்டி.!

- Advertisement -

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதையால் கவின் ரசிகர்களின் முழு ஆதரவும் தற்போது லாஸ்லியாவிற்கு தான் இருந்து வருகிறது. லாஸ்லியா கவினை மற்றும் சேரனை தவிர மற்ற ஆண் போட்டியாளர்களிடம் அவ்வளவு ராசியாக இருந்து வந்ததில்லை. ஆரம்பத்தின் ஒரு எபிசோடில் லாஸ்லியா வை முகென் வடிவேலு என்று கிண்டல் செய்த போது லாஸ்லியா முகெனிடம் கோபித்து கொண்டார். அதே போல முகெனனிடம் பல முறை சிறு சிறு மனஸ்தாபமும் லாஸ்லியாவிற்கு ஏற்பட்டது.

-விளம்பரம்-

மேலும், ஒரு எபிசோடில் முகென் இறுதி போட்டிக்கு தகுதி பெற தகுதி இல்லை என்று கூட லாஸ் லியா கூறி இருந்தார். ஆனால், இறுதி போட்டி நெருங்க இவர்கள் இருவரின் அண்ணன் தங்கை பிணைப்பு மிகவும் உறுதியானது. இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனைவரும் விடை பெற போவதை முன்னிட்டு போட்டியாரல்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களின் டி-ஷர்ட்களில் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் எழுதினாரகள்.

அப்போது முகென் லாஸ்லியாவின் டி-ஷர்ட்டில், Future is so beautiful like you laya ! Bokkandi என்று எழுதி இருந்தார். அப்போது அருகில் இருந்த ஷெரின், போக்கென்டி என்றால் என்ன என்று முகெனிடம் கேட்க, அதற்கு முகென், அப்படி என்றால் தவளை என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். ஆனால் , உண்மையில் போக்கென்டி என்றால் மலாய் மொழியில் அழகு என்று அர்த்தம். இருப்பினும் லாஸ்லியாவை கேலி செய்ய முகென், அவரை தவளை என்று கூறியுள்ளார் .

லாஸ்லியாவிற்கு சமூக வலைத்தளத்தில் எத்தனோ ரசிகர்கள் இருந்து வந்தாலும், அதே அளவிற்கு ஹேட்டர்ஸ்களும் இருக்க தான் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் லாஸ்லியாவின் உருவத்தை கிண்டல் செய்து பர்ஸ் வாய், தவளை, கிழிஞ்ச வாய் என்று மோசமான பெயர்களை வைத்து ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், தற்போது லாஸ்லியா ஹேட்டர்ஸ் போல முகெனும் லாஸ்லியாவை தவளை என்று குறிப்பிட்டுள்ளது, லாஸ்லியாவின் ஹேட்டர்ஸ்களுக்கு வெறும் வாயை மென்றவர்களுக்கு அவள் கிடைத்தது போல தான் இருக்கிறது.

Advertisement