அந்த சிலை அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும்.! முகெனுக்கு இப்படி ஒரு ஆசையா.!

0
4654
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகின் ராவ்.மேலும், தன்னுடைய திறமையாலும் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி வந்தார். அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.இது மட்டும் இல்லைங்க முகின் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் முகின் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

-விளம்பரம்-
mugen

பேட்டியில் அவர் கூறியது, நான் நினைச்சு கூட பாக்கல எனக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும்னு.இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லாருமே எதிர்பார்த்த மாதிரி நானும் தர்ஷன் தான் வின்னர் ஆவார் என்று நினைச்சேன். ஏன்னா ! தர்சன் அந்த அளவு முயற்சியும் நம்பிக்கையும் போட்டு விளையாடி வந்தார். தர்ஷன் என்னுடைய நெருங்கிய நண்பர்.தர்சன் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு திறமை உள்ள ஒரு நல்ல மனிதர். ஆனா அவரு திடீர்னு ஒரு வாரத்துக்கு முன்னாடி எலிமினேட் செய்யப்பட்ட போது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சாண்டி பற்றி சொல்லனும்னா பாஸிட்டிவ் எனர்ஜி உள்ளவர்.அவர் இருக்கிற இடம் எப்பவுமே கலகலப்பாகவும், சந்தோஷமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

அதோட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பிரபலமானதும், இந்த அளவுக்கு வெற்றியை தந்ததுக்கு காரணம் சாண்டி அண்ணன் தான். கவினை பற்றி சொல்லனும்னா அவர் ஒரு நியாயமான மனிதன்.உறவுகளுக்கு மரியாதை ,அனுப்பும் செலுத்துபவர். அவர் திடீர்னு வெளியேற்றும் போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியல. லாஸ்லியா ஒரு குறும்புக்கார அழகான பொண்ணு சொல்லலாம். எப்பவும் என் தங்கை மாதிரி சுட்டி தனம் பண்ணிட்டு இருப்பாங்க. அபிராமி பத்தி சொல்லுங்க என கேட்டதற்கு அவர் சிரிச்சுகிட்டே என் வாழ்க்கையில கிடைச்ச ஒரு நல்ல தோழி என்று சொல்லலாம். நான் எப்ப சோகத்திலும் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருந்தார்.

mugen

எங்க நட்பு இதே மாதிரி கடைசி வரை தொடரும் என்று கூறினார். எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அபிராமி காதல் பற்றி தான் ஆனால், அபிராமி என்னுடைய நெருங்கிய தோழி என்று கூறி முடித்து விட்டார். மேலும், இந்த அளவிற்கு நான் வெற்றியை பெற்றிருக்கிறது காரணம் தமிழ்நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் தான் அவர்களுக்கு கோடான கோடி நன்றி என்று தெரிவித்திருந்தார்.அதுமட்டும் இல்லைங்க முகினின் மிகப் பெரிய ஆசை என்னவென்று பார்த்தால் உலகில் உள்ள மிகப் பிரபலமான அருங்காட்சியத்தில் எனக்கு ஒரு மெழுகு சிலை வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

அது பக்கத்தில் நின்று நான் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, கனவு என்று கூறினார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆனவுடன் விஜய் நடிப்பில் “தளபதி 64” படத்தில் முகினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், அனிருத், இமான் ஆகியோர் தலைமையில் பாடமும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement