விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் என்றாலே வேற லெவல். அதிலும் ஜோடி நம்பர்-1, கலக்கப்போவது யாரு தொடங்கி தற்போது இருக்கும் பிக் பாஸ் வரை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் எல்லாம் பெரிய அளவு ஹிட்டாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பெயரை மாற்றி வைத்தும் ஒளிபரப்பு செய்கிறார்கள். தற்போது உள்ள டாப் சேனல்களில் விஜய் டிவியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் நடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பிளாக் பஸ்டர் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்றது. மேலும், இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தது.

மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நம்ம உலக நாயகன் கமலஹாசன் தான். அது மட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தை பார்த்து அடுத்த வருடமும் இவர் தான் தொகுத்து வழங்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வின்னர் ஆரவ். தற்போது இவர் ‘மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ரித்விகா. இவர் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படமும் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளிவரப்போகிறது.

இதையும் பாருங்க : ஒரு வருடத்திற்கு முன்னாள் வந்த வதந்தி, மீண்டும் வீடியோவை பதிவிட்ட நகுல். என்ன கொடுமை இதெல்லாம்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் நம்ம மலேசியா பாப் பாடகர் முகென் தான். இவர் ஒரு சிங்கர் மட்டுமல்லாமல் மாடலும் செய்பவர். இவர் மலேசியாவை சேர்ந்தவர். இவர் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய பாடல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவருடைய பாடல்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் எழுதி,பாடிய “சத்தியமா நான் சொல்லூரேண்டி” என்ற பாடல் வெறித்தனமாக ரசிகர்களை கவர்ந்தது என்றும் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரம்பத்திலேயே பாய்ஸ் என்ற அணியை உருவாக்கி “வி ஆர் தி பாய்ஸ்” என்ற பாடலையும் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த பாட்டு தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு முகெனும், தர்ஷனும் ‘wall’ என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்கள். மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 7 பைனல் நிகழ்ச்சிக்கு முகென் விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமான சிங்கர் அனிருத் அவர்களும் வந்திருந்தார். அப்போது முகெனும், அனிருத்தும் சேர்ந்து பாடிய வீடியோ மக்களிடையே வேற லெவல்ல பட்டையை கிளப்பியது.

இப்படி முகென் ராவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததிலிருந்தே வெற்றி மேல் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் நிறைய வந்து குவிகின்றது. இந்த நிலையில் “முகெனின் வெற்றி பயணங்கள்” என்று ஒரு புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் முகென் வெற்றியை குறித்து பல சுவாரசியமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ள போகிறார். மேலும், முகென் வெற்றி பயணத்தை வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளார்கள். இது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இதே போல முகெனுக்கு விஜய் டிவி கொடி பிடித்து வருவதால் முகென் மீது ரசிகர்களுக்கு இருந்த விருப்பம் போய் தற்போது வெறுப்பு தான் வருகிறது என்று குமுறுகிறார்கள் ரசிகர்கள். மேலும், ரசிகர்கள் முகெனை வெறுக்கும் வரை விடமாட்ட என்று விஜய் டிவியை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement