ஒரு வருடத்திற்கு முன்னாள் வந்த வதந்தி, மீண்டும் வீடியோவை பதிவிட்ட நகுல். என்ன கொடுமை இதெல்லாம்.

0
3164
nakul-wife
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெயதேவ். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர்.

-விளம்பரம்-

தில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று. நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் இளசுகள் நல்ல வரவேற்பை பெற்றது., மேலும் இவர் நடித்த வல்லினம், தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : விஸ்வாசம் போது அஜித்தை பாராட்டிய அதே அதிகாரி. விஜய் பற்றி என்ன பேசியுள்ளார் பாருங்க. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தினை காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களை சச்சின் தேவ் என்பவர் தான் இயக்கி வருகிறார். நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் நடிகர் நகுலுக்கு குழந்தை பிறந்ததாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது. ஆனால், அதனை மறுத்து கடந்த நடிகர் நகுல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நகுலுக்கு குழந்தை இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரலானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள நகுல், அது என்னுடைய குழந்தை இல்லை என்றும். அது என் அண்ணனின் குழந்தை ஆனால், அதுவும் என் குழந்தை போல தான். எனக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே குழந்தை என் மனைவி சுருதி தான் என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement