தர்ஷன் இல்லை. கடைசியில் கமலுடன் இணைந்த 'பிக் பாஸ்' பிரபலம் இவர்தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.

By ·

ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்'. இந்த 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'உலக நாயகன்' கமல் ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த ஆண்டு ஒளிபரப்பானது 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 3 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், கவின், சேரன், வனிதா, அபிராமி, மதுமிதா, சாக்ஷி அகர்வால், சரவணன், ரேஷ்மா, மீரா மிதுன், கஸ்தூரி, மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு ஆகிய பிரபலங்கள் போட்டியாளராக இருந்தனர்.

இதில் முகேன் ராவ் தான் இறுதியில் வெற்றி பெற்றார். இந்த ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகு நடிகர் கமல் ஹாசன் தனது 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்போகும் ஒரு படத்தில் தர்ஷன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. பின், தர்ஷன் மற்றும் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தது. இதில் தர்ஷனின் பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆனது.

இதையும் பாருங்க : நயன்தாரா யோகியமா, நயனின் முன்னாள் காதலர்கள் குறித்து ஸ்ரீரெட்டி கிளப்பிய புதிய சர்ச்சை.

ஆகையால், அவர் கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்து விட்டார் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், 'பிக் பாஸ்' புகழ் முகேன் ராவ், கமல் ஹாசனுடன் கூட்டணி அமைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், இது ஒரு திரைப்படத்திற்காக அல்ல ஒரு பாடலுக்காக… உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது.

https://twitter.com/thinkmusicindia/status/1252836494416285696

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் 'கொரோனா' விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, பாடியிருக்கிறார். 'அறிவும் அன்பும்' என இப்பாடலுக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல் ஹாசனுடன் சேர்ந்து 'பிக் பாஸ்' புகழ் முகேன் ராவ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், ஆண்ட்ரியா ஆகிய பிரபலங்களும் பாடியுள்ளனராம். இப்பாடலின் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படுமாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full