சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் சர்ச்சையில் சிக்குவதை விட பல பேரை சர்ச்சையில் அவர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டார். தெலுங்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக சொல்லி தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள். பின் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெலுங்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் பெயர்களை சொல்லி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் ஆதாரத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
நடிகை ஸ்ரீ ரெட்டியின் இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார். பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இதனாலே நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து உள்ளார். ஆனால், இவர் இப்படி கூறியிருந்த குற்ற சாட்டை தமிழ்த் திரையுலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இவர் தற்போது புது பிரச்சனையை கிளப்பி உள்ளார். நடிகர்கள் மட்டும் இல்லாமல் இவர் ஒரு நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை.
அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பது, தென்னிந்திய சினிமா உலகில் பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் நயன்தாராவை தெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால்,அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. நயன்தாரா அவர்கள் ஏற்கனவே திருமணமான நபரை தான் காதலித்து வந்தார். இது அனைவரும் திரியும்.
நயன்தாராவை எதிர்த்து உங்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடிந்ததா? ஒரு குடும்பத்தையே குலைத்தவர் நயன்தாரா. ஆனால், அவர் பெரிய நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் என்று எல்லாம் சொல்லி கொண்டாடுகிறீர்கள். பெரிய நடிகைக்கும் எங்களை மாறி போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவு தான் என்று கூறினார். இப்படி இவர் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் வருடங்களாகவே கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் .