இறுதியில் தாயகம் திரும்பிய வெற்றி மகன் முகென்.. விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

0
7820
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முகேன், லாஸ்லியா சாண்டி, ஷெரின் ஆகிய நால்வர் இறுதிப்போட்டியில் நுழைந்தனர். யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் முகென் முதல் இடத்தை பிடித்து பிக்பாஸ் சீசன் பட்டத்தை வென்றார். இவரை தொடர்ந்து சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் மிகவும் சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்றது. சரவணனின் வெளியேற்றும், மதுமிதாவின் வெளியேற்றம் என்று இரண்டு போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறியது இந்த சீசனில் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. அதேபோல இந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வருவார் என்று எதிர்பார்த்த கவின் மிபிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் டிக்கட் டு பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தார் முகென். மேலும், கடந்த இரண்டு நாட்களாக டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற யாரும் பிக்பாஸ் பட்டத்தை வென்றதும் இல்லை.

- Advertisement -

ஆனால், இந்த சீசனில் அந்த கூற்றை முறியடித்து பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பிக்பாஸ் பட்டத்தை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையையும் அடைந்தார் முகென். முகென் மலேசியாவை சேர்ந்தவர் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். சங்கீத குடும்பத்தை சேர்ந்த இவர் சிறுவயது முதலே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலேயே தனது தந்தையின் பல்வேறு மேடைகளில் பாடி இருக்கிறார். அதன் பின்னர் இளம் வயதில் தனியாக தனக்கென்று ஒரு குழுவை அமைத்து ஆல்பம் பாடல்களை மலேசியாவில் வெளியிட்டு வந்தார். இவரது வாழ்நாள் இலட்சியமே ஒரு சிறந்த பாடகராக வரவேண்டும் என்பது தானாம். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முகென் தனக்கு தமிழ் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் வெறியும் இருப்பதாக கூறியிருந்தார்.

mugen roa

பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகென் பாடிய பல்வேறு பாடல்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக முகென் பாடிய நீதானே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. எனவே, முகென் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த பாடகராக வரவேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முகென் தனது பெற்றோரை பார்ப்பதற்காக மலேசியாவிற்கு சென்றிருக்கிறார். சமீபத்தில் மலேசியாவிற்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் விமான பணிப்பெண்ணுடன் முகென் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

முகென் கூறியது போலவே விரைவில் அவர் தமிழ்நாட்டிற்கு திரும்புவார் என்றும் முஜீனின் திறமையை விரைவில் தமிழ்சினிமா இசையமைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து அவருக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தரும் என்றும் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். அதேபோல விரைவில் முகென் பாடிய நீதானே பாடல் ஏதாவது தமிழ் படத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Advertisement