பிகில் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு ட்வீட் செய்த பிக் பாஸ் 3 பிரபலம். இவ்வளவு வெறித்தனமா.

0
3864
Bigil
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ்காட்டியது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.

-விளம்பரம்-

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். முகென் பிறந்தது, வளர்ந்தது,படித்தது எல்லாமே மலேசியாவில் தான். இவர் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் ஆல்பங்கள் வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. முகின் பிறந்தது , வளர்ந்தது,படித்தது எல்லாமே மலேசியாவில் தான். இவர் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் ஆல்பங்கள் வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

இதையும் பாருங்க : உல்லாசம் படத்தில் நடித்த நடிகையா இது. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் பாடிய இந்த பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் முகென் வெறித்தனமான விஜய் ரசிகர் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது விஜய்யின் போக்கிரி பாடலுக்கும் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் நேற்று வெளியான பிகில் படத்தை பார்த்துள்ளார் முகென்.

கடந்த நாட்களுக்கு முன்னர் மலேசியா சென்ற முகென், தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். சமீபத்தில் சென்னையில் ‘பிகில் படத்தை பார்த்துள்ள முகென், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘3 மணி நேரம் வெறித்தனமான பவர் பேக்’என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தான் ஒரு வெறித்தனமான விஜய் ரசிகர் என்பததை மீண்டும் நிரூபித்துள்ளார் முகென் இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாமல் ‘பிகில்’ படத்தை இன்று இரண்டாவது முறையாக பார்க்கப்போவதாகவும் சமீபத்தில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார் முகென்.

-விளம்பரம்-

‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், முகின் “தளபதி 64” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement