நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் திடீரென உதவி கோரியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் தான் மும்தாஜ் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவ்வளவு ஏன் ஒரு கட்டத்தில் வடிவேலு, டி ராஜேந்திருக்கு எல்லாம் ஜோடியாக நடித்து இருந்தார் மும்தாஜ். அதுமட்டும் இல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் மூலம் 90ஸ் இளசுகள் மத்தியில் மும்தாஜ் பேமஸ் ஆனார். பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய இவர் கவர்ச்சியாக நடித்திருந்தார். அப்படி இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து இருந்தார்.

Advertisement

மும்தாஜ் மீது புகார்:

இந்தநிலையில் மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் போலீசில் உதவி கோரியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்தாஜ் அவர்கள் தற்போது அண்ணாநகர் H பிளாக் 2வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகை மும்தாஜ் வீட்டில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முஜூதீன்(23) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று காலை சென்னை அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களிடம் காவல்துறைக்கு தகவல் சொல்லி தனக்கு உதவ முடியுமா? என்று கேட்டிருக்கிறார்.

காவல்துறையில் உதவி கேட்ட பணிப்பெண் :

அதன்பேரில் பொதுமக்கள் காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100க்கு கால் செய்து தகவல் அளித்திருக்கின்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இருந்தனர். பின் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணையை நடத்தி இருந்தனர். அதில் அந்த பணிப்பெண் கூறியிருப்பது, நானும் என்னுடைய தங்கையும் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக எங்களுக்கு அதிக வேலை கொடுக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் மொபைல் போன் மற்றும் டிவி பார்ப்பதற்கும் கூட அனுமதி அளிக்கவில்லை.

Advertisement

மும்தாஜ் வீட்டில் விசாரணை:

அதனால் எனக்கு அங்க வேலை பார்க்க பிடிக்கவில்லை. என்னை என்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறு காவல்துறையிடம் கூறியிருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மும்தாஜ் வீட்டு தரப்பில் கூறியிருப்பது, அக்கா – தங்கை இருவரும் இங்க பணிபுரிகிறார்கள். அது உண்மைதான். அக்கா, தங்கை பிரச்சனையில் தான் அவர் இங்கிருந்து செல்ல நினைக்கிறார்.

Advertisement

முஜூதீன் நிலை:

இருவரையும் நாங்கள் எங்கள் வீட்டின் பெண்களாகத்தான் கருதி வருகிறோம் என்று மும்தாஜ் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் தங்கையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நான் மும்தாஜ் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதனையடுத்து அண்ணாநகர் போலீசார் பெண்கள் காப்பகத்தில் முஜூதீனை சேர்த்தனர். பின் அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னைக்கு வரச் சொல்லி உள்ளனர். இந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement