ரச்சித்தா குறித்து பிக் பாஸில் ஒரு பேச்சு, சரவணன் மீனாட்சி ஷூட்டிங்கில் ஒரு பேச்சு – வைரலாகும் மைனாவின் வீடியோ.

0
800
myna
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 போட்டியாளர்களில் ஒருவரான ரட்சிதாவைப் பற்றி மணிகண்டனிடம் மைனா நந்தினி கூறியிருப்பது தற்போது ஷோசியல் மீடியால் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் 47 நாட்கள் கடந்துள்ள நிலையில் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதுவரை ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி போன்ற போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஒப்பன் நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் ராபர்ட் மாஸ்டர், தனலட்சிமி, அஸீம், ராம், மணிகண்டன், அமுதவாணன் போன்றோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த வார இறுதி வந்துவிட்டதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

வெகுநாள் நண்பர்கள் :

- Advertisement -

இந்நிலையில் தான் தொகுப்பாளனியும் நடிகையுமான மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் போட்டியாளரான மணிகண்டனிடம் ரட்சித்தாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார். ரட்சிதா மற்றும் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே பல காலமாக நண்பர்களாக இருந்து வந்தவர்கள் தான். இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியலின் மூலம்தான் பிரபலமானார்கள். அதன் பின்னர் இருவரும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக மைனா நந்தினி விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மற்றும் ரட்சிதாவும் “உப்பு கருவாடு” என்ற திரைப்படத்தில் நடித்துளார்.ரட்சிதான் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி சிரியல்களிலும் நடித்துள்ளார்.

பெரிதாக பேசிக்கொள்ள வில்லை :

இப்படியிருக்க தொகுப்பாளனியான மைனா நந்தினியும், சின்னத்திரை நடிகையான ரட்சிதாவும் வெகு காலமாக நன்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்டனர். ரட்சிதா முதல் வாரமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். ரட்சிதா மற்றும் நந்தினி இருவருமே நண்பர்களாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக பேசிக்கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதுதான் நட்பா :

மேலும் ரட்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் சம்மந்தப்பட்ட விஷியங்கள் பிக் பாஸ் தொடங்கி இரண்டாவது நாளே ஆரம்பமாகிவிட்டது. ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நம்முடைய இந்த நட்பு வெளியில் சென்றும் தொடர வேண்டும் என்று கூறியதெல்லாம் நெட்டிசன்கள் மத்தியில் விமர்ச்சனத்திற்குள்ளானது. ஆனால் ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மைனா நந்தினி இதனை பற்றி ஒரு விஷயம் கூட ரட்சித்தாவிடம் தெரிவிக்கவில்லை. மாறாக ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ரட்சித்தாவின் பெயரை கெடுப்பதாக ரட்சித்தாவின் கணவர் தினேஷ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி மைனா நந்தினியை திட்டியிருந்தார்.

முதுகில் குத்திய மைனா நந்தினி :

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மைனா நந்தினி பேசிய வீடியோவில் ரட்சிதாவை மிகவும் பெருமையாக பேசியிருப்பார். மேலும் ரட்சிதா தன்னை ஊக்குவிப்பதாகவும், தான் கட்டியிருக்கும் தாவணி கூட ரட்சித்தாவுடயதுதான் என்று மிகவும் பெருமையாக ரட்சித்தவை பற்றி பேசியிருப்பர். ஆனால் இன்றைக்கு மைனா நந்தினி தற்போது ரட்சித்தாவை பற்றி கேவலமாக மணிகண்டனிடம் பேசிய வீடியோ பதிவு ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரட்சிதா மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அவருடைய புடவையை கூட தொட விடமாட்டார் என்று பேசிக்கொண்டிருந்தார். மைனா நந்தினி இப்படி பேசியிருக்கும் விடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் :

மைனா நந்தினி ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் விஷியத்தில் ரட்சித்தாவிற்கு எதிராக நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கடந்த காலங்களில் நன்றாக பேசிவிட்டு தற்போது பிரபலமானவிடம் அப்படியே ரட்சித்தாவை தரைகுறைவாக பேசியிருப்பதை வைத்து நெட்டிசன்கள் மைனா நந்தினியின் உண்மை முகம் தெரிந்து விட்டது என்று மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மைனா நந்தினி ரட்சித்தாவை பற்றி கேவலமாக திட்டியிருக்கும் விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement