அட, பிக் பாஸ்ஸின் முதல் திருநங்கை நமிதா, சமுத்திரகனியின் இந்த படத்தில் நடித்தவர் தானா. அதுவும் இப்படி ஒரு ரோலில்.

By Rajkumar · 3/10/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்று கோலாகளமாக துவங்கியது. கடந்த நான்கு சீசன் களை போலவே இந்த சீசனிலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் அரசியல் இல்லாத பல்வேறு போட்டியாளர்களை இறக்கி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். மேலும், பெரிய நடிகர்களோ நடிகைகளோ இந்த சீசனில் இல்லை.

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கின்றனர். நாம் பார்த்த சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 5 செட் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. மழை பெய்யும்போது பயன்படுத்துவதற்கு குடைகளும் வைக்கப்பட்டிருந்தன. வலது புறத்தில் செடி போன்ற டிசைன் செய்யப்பட்டிருந்த ஒரு நீர் தொட்டிஅமைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக ஜெயில் போன சீசன் போலவே வீட்டிற்கு வெளியே இருக்கும். ஜெயிலுக்குள் கழிப்பறையும் இருக்கும். ஆனால், இந்த முறை நீச்சல் குளத்தை ஜெயிலாக மாற்றி அதை பாதாள சிறை போல மாற்றி விட்டனர்.

இதையும் பாருங்க : சமந்தாவின் விவகாரத்துக்கு இந்த Divorce Expert நடிகரே காரணம் - சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை.

சரி, போட்டியாளர்களை பற்றி பாப்போம். ஏற்கனவே சொன்னது போல இந்த சீசனில் பல விதமான புதுமுகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் 2011 ஆம் ஆண்டு தான் திருநங்கையாக மாறினார்.

அதை தொடர்ந்து மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேரு அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். மேலும், ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் அழகி போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். 2018-ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அதன் பின்னர் தான் இவருக்கு சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full