சமந்தாவின் விவகாரத்துக்கு இந்த Divorce Expert நடிகரே காரணம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை.

0
6044
samantha
- Advertisement -

சமந்தா- நாகா சைதன்யா இவர்களின் விவாகரத்துக்கு பிரபல நடிகர் தான் காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்ட செய்தி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சமந்தா – நாக சைதன்யா இருவரும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். ஆனால், என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர்கள் இருவரின் விவகாரத்து வழக்கு கூடிய விரைவில் நீதிமன்றத்திற்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இவர்களின் விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் ஒருவர் நான்கு வருடங்கள் மற்றும் ஒரு சகாப்தத்திற்கு மேலாக நடிகை ஒருவருடன் உறவில் இருந்தார். பின் சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார். விவாகரத்துக்கு நிபுணர் என்று அழைக்கப்படும் அந்த நடிகரை சந்தித்த பிறகு தான் நாக சைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும், கங்கனா ரனாவத் கூறிய விவாகரத்து நிபுணர் என்று கூறப்படும் நடிகர் சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நட்புடன் தொடர்வதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த பிரபல நடிகரும் நாக சைதன்யாவும் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இவர்கள் இருவரும் நெருக்கமான நட்புறவில் இருப்பதாகவும், விவாகரத்து குறித்து அந்த நடிகரிடம் தான் நாக சைதன்யா ஆலோசனை கேட்டதாகவும், அவருடைய ஆலோசனையின்படி தான் சமந்தாவை அவர் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கங்கனா ரனாவத் கூறிய அந்த நடிகர் யார் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement