திருமணமாகி 5 ஆண்டுக்கு பின் கர்ப்பம், முதன் முறையாக தன் கணவருடன் Pregnancy போட்டோ ஷூட் நடத்திய நமீதா.

0
1140
namitha
- Advertisement -

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நமிதா :

திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். தே போல நடிகை நமீதா பா ஜ க கட்சியிலும் சேர்ந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் கூட பா ஜ க சார்பாக தீவிரம் பிரச்சாரம் செய்தார் நமிதா. இப்படி ஒரு நிலையில் நமீதா, கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார்.

உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன்

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார் நமீதா. இதுகுறித்து பதிவிட்டஅவர் ”தாய்மை, புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன்.

-விளம்பரம்-

பிரபலங்கள் வாழ்த்து :

உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது,நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார் நமீதா. நமீதாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது கணவருடன் இணைந்து Pregnancy போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் நமிதா.

நமீதாவிற்கு இருந்த பிரச்சனை :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் உடலில் இருக்கும் பிரச்னைக குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நமீதா. அதில் ‘ 10 வருடத்திற்கு முன் தான் அதிகம் சாப்பிடும் சாப்பிட்ட தாகவும் இதனால் தன்னுடைய எடை 97 கிலோ வரை இருந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், பலரும் எனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதான் இப்படி குண்டாக இருப்பதாக கூறினார்கள். உண்மையில் எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் தைராய்டு நோயும் இருந்தது. ஓர் கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணம் அந்தது. பின்னர் கிருஷ்ணரின் அருளாலும் தியானித்தினாலும் அதில் இருந்து மீண்டு வந்தேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement