ஒயில்டு கார்ட்டு போட்டியாளராக மற்றும் ஒரு விஜய் பட நடிகையா ? இது என்னடா அடுத்த ட்விஸ்டு.!

By Rajkumar · 9/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுதான் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதுவரை 77 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தான் ரகசிய அறையை பயன்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் சேரன் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவரை ரகசிய அறைக்குள் அனுப்பி வைத்தார்கள். எனவே சேரன் ரகசிய அறையில் இருந்தபடி சிறிது நாட்கள் போட்டியாளர்களை கண்காணிப்பார்.

Advertisement

எனவே, இந்த வாரம் கொஞ்சம் நிகழ்ச்சி சுவாரசியமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்ட பிக்பாஸ் அடுத்து கார்டு போட்டியாளரை களமிறக்க இருக்கிறது ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அவரால் நிகழ்ச்சியில் எந்த மாற்றமும், சுவாரசியமும் ஏற்படவில்லை . இதனால் உள்ளே நுழைந்த இரண்டே வாரத்தில் அவர் மக்களால் வெளியேற்றப்பட்டார்.

இதையும் பாருங்க : ரசிகர்களுக்கும் லாஸ்லியாவிற்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் பிக் பாஸ்.!

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் பிரபல நடிகை ஸ்ரேயா ஒயில்டு கார்ட்டு போட்டியாளராக பிரபல நடிகை ஸ்ரேயா களமிறங்க போவதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் விஜய் படத்தின் மூலம் அறிமுகமான வனிதா போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிலையில் விஜயுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த ஸ்ரேயாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போகிறார் என்று செய்தி தான் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டு காலமாக திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை அதனால் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் ஸ்ரேயா. இந்த நிலையில் இவர் பிக் பாஸில் கலந்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் ஒயில்டு கார்ட்டு போட்டியாளரை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த தகவல் வதந்தியாக தான் இருக்கும் என்று கருதபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full