ரசிகர்களுக்கும் லாஸ்லியாவிற்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் பிக் பாஸ்.!

0
32423
Losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் Freeze டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரபடுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள்.

Image result for bigg boss 2 freeze task tamil

அந்த சமயத்தில் யாருடைய உறவினர் வருகிறார்களோ அவரை ரிலீஸ் செய்வதர்க்கு முன்பாக மற்ற போட்டியாளர்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த பின்னர் இறுதியில் அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில நேரத்தில் அந்த போட்டியாளரின் உறவினர்கள் வெளியே செல்லும் வரை கூட ரிலீஸை அறிவிப்பாமலே இருப்பார் பிக் பாஸ்.

- Advertisement -

இந்த டாஸ்க் எப்போதும் பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமானதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரம் freeze டாஸ்க் நடத்தபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Losliya

லாஸ்லியா தனது தந்தையை பிரிந்து 10 வருடமாக வாழ்ந்து வருகிறார். மேலும், ரசிகர்களும் இதுவரை லாஸ்லியாவின் தந்தையை கண்டதும் இல்லை. எனவே, லாஸ்லியாவின் தந்தை வருகை லாஸ்லியாவிற்கும் சரி அவரது ரசிங்கர்களுக்கும் சரி ஒரு மிகப்பெரிய சார்ப்ரைசாக இருக்கும். அதிலும், லாஸ்லியாவிற்கு இது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.