அவர் என்னை படு மோசமாக நடத்தினர் – லாரன்ஸ் படத்தில் நடித்த பிக் பாஸ் நடிகை புலம்பல்.

0
200
nikki
- Advertisement -

காஞ்சனா பட நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா 3. இந்த படம் முனி படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்பொலி, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் திகில், நகைச்சுவை பேய் படம். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக நடிகை நிக்கி டம்பொலி அறிமுகமாகி இருந்தார். அதோடு இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

- Advertisement -

நிக்கி டம்பொலி பற்றிய தகவல்:

நடிகை நிக்கி டம்பொலி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவர் விளம்பர நடிகையாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பின்னர் தெலுங்கு மொழியின் மூலம் தான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அதிலும் தமிழில் வெளியான இருட்டுஅறையில்முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிக்கி டம்போலி நடித்து இருந்தார்.

ஹிந்தி பிக் பாஸில் நிக்கி:

இதனால் இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை சேர்த்திருக்கிறார் நிக்கி டம்பொலி. மேலும், இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்திருக்கிறார். 2020ஆம் ஆண்டில் நடிகர் சல்மான்கான் இந்தியில் தொகுத்து வழங்கியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்கி டம்பொலி பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். இதனால் இவருக்கு பாராட்டு கிடைத்து இருந்தது. தற்போது மீண்டும் இவர் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் நடந்து கொண்டது குறித்து நிக்கி சொன்னது:

இந்நிலையில் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ரொம்ப மோசமாக நடந்து கொண்டது குறித்து நிக்கி டம்போலி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, தற்போது நான் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், தென்னிந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் ஒருவர் என்னை மோசமாக நடத்தியிருந்தார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம் சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்தரமாக நடத்தி நடத்தி இருந்தார்.

கேள்வி எழுப்பும் ரசிகர்கள்:

இதனால் நான் ரொம்பவே அழுதுவிட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி நிக்கி டம்போலி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் யார் அந்த இயக்குனர்? என்று கேள்வி கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கு நிக்கி தம்போலி தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

Advertisement