Ooo வார்த்தையில் திட்டிய நிரூப், செம கடுப்பாகி கத்திய ஜூலி – கண்டிக்கும் நெட்டிசன்கள் (சீசன் 4ல எடுத்த பேரே கெடுத்துகிட்டு வரும் manchild நிரூப்)

0
776
niroop
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ரம்யா பாண்டியன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார். இந்த வாரம் கோழி முட்டை டாஸ்க் பயங்கரமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் நிரூப், ஜூலியை ஆவேசமாக, அசிங்கமாக திட்டும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில், ஜூலி அனிதாவிடம் நிரூப் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

ஜூலியை அசிங்கமாக திட்டிய நிரூப்:

அப்போது நிரூப், ஜூலியை பார்த்து பொய் பேசுபவள் என்று கோபமாக பேசுகிறார். இதனால் ஜூலிக்கும், நிரூப்க்கும் இடையே வாக்குவாதம் அதிகம் ஆகிறது. அப்போது நிரூப், ஜூலியை பார்த்து ‘போடி ஓலு..’ என்று அசிங்கமாக திட்டுகிறார். இதனால் ஜூலி கொந்தளித்து போய் நிரூப் உடன் சண்டை போடுகிறார். இப்படி இவர்கள் கோவலமாக பேசி இருக்கும் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் விட வேகமாக பரவி வருகிறது.

நிரூப்பை திட்டிய ஜூலி:

இதற்கு பிக்பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே பிரச்சனையின் போது அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று நீருப்பை அனிதா எச்சரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில வாரங்களுக்கு முன்பு கூட ஜூலி, நிரூப்பை பார்த்து என் கேரக்டர் பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸ்ஸும் கிடையாது, வாயெல்லாம் ஒடச்சி கைல கொடுத்துடுவேன் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

ஜூலி- நிரூப் ப்ரச்சனை:

உடனே நிரூப், எனக்கு பஞ்ச் பண்ண விருப்பம் இல்லை என்று சொல்கிறார். அதோடு ஜூலியும் அபிராமியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அபிராமிக்கு யாரு எல்லாம் பிடிக்கவில்லையோ, ஜூலி அவர்களிடம் பேசுவது கிடையாது. அதே போல் நாமினேஷனில் கூட அபிராமி யாரை நாமினேட் செய்தாரோ, ஜூலியும் அவர்களே தான் நாமினேட் குறிப்பாக அபிராமி நிரூப்பை நாமினேட் பண்ணி இருந்தார். ஜூலியும் எனக்கு நிரூப்பை சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று நாமினேட் செய்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில்

அனிதா பேசிய சர்ச்சை வார்த்தை:

இந்த முறை சண்டை பயங்கரமாக முற்றியது. அதேபோல் தினங்களுக்கு முன்பு கூட அனிதா, நிரூப்பிடம் சூ *… என்று அசிங்கமாக பேசி இருந்தார். ஆனால், அது விளையாட்டாக சொன்னதால் ரசிகர்கள் கண்டித்து விட்டு விட்டார்கள். ஆனால், இந்த முறை நிரூப், ஜூலியை பேசி இருக்கும் விதம் ரொம்ப தவறாக இருக்கிறது என்று பலரும் கண்டித்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். அதோடு அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி என்பதால் இது பயங்கர சர்ச்சையாக மாறி உள்ளது. ஆகவே நாட்டாமை தீர்ப்புக்காக மக்கள் வையிட்டிங்.

Advertisement