கமலை நார் நாராக கிழித்த பாலாஜி மனைவி நித்யா, அடுத்து சிம்பு குறித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க. வீடியோ இதோ.

0
564
nithya
- Advertisement -

கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது.

-விளம்பரம்-

பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

பாலாஜி அளித்த புகார் :

பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார். அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா.இந்த நிலையில் தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும்படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

nithya

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யா, பிக் பாஸ் முடிந்ததும் கமல் ஒரு மது விருந்து வைத்ததாகவும் அப்போது பாலாஜி தன்னிடம் சொல்லாமலேயே வந்ததாகவும் அப்போது கமல் முன் நல்லவர் போல பாலாஜி நடித்தார். அப்போது முதல் கமலிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக நான் மிகவும் உழைத்தேன். அப்போதும் அவர் என்னிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்கவில்லை.

வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும் :

-விளம்பரம்-

மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான்

தன் கட்சயில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார். மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான் மக்களுக்கு எந்த நீதியும் இல்லை என்று கூறியுள்ளார் நித்யா. அதே போல பாலாஜி குறித்து பேசிய நித்யா, அவர் நன்றாக நாடகம் போடுகிறார். அவர் மீடியாவிற்காக தான் இத்தனையும் செய்கிறார். அவர் கூட அவர் வேலைக்காக என் மகளை கூட்டி சென்று இருக்கிறார்.

சிம்பு குறித்து நித்யா :

ஆனால், நான் கூட்டி போனதை மட்டும் குற்றம் சொல்கிறார். அவர் கண்டிப்பாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார் நித்யா. அதே போல மீடியாவில் இருந்து எனக்கு சிம்பு மட்டும் தான் என்ன பிரச்சனை என்பதை எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து விசாரித்தார். சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் தங்கமான மனிதர். நான் சிம்பு பேசிய போது யாரோ மிமிக்ரி பேசுகிறார்கள் என்று நினைத்து கட் பண்ணிவிட்டேன். பின் அவர் என்னை வீடியோகாலில் அழைத்து பேசினார் என்று கூறியுள்ளார் நித்யா.

Advertisement