பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி - ரவீனா தான் காதல் கண்டன்ட்க்கு கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் - ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள்.
https://twitter.com/offl_trollmafia/status/1721428959458697390
எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன்னையும் நிக்சனையும் இணைத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவது, புதிய போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் குழப்பம் அடைந்திருக்கும் ஐஷு, இது பற்றி ஒரு வழியாக மணியிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.
https://twitter.com/BB_Tamil_Videos/status/1721410771740176517
அவனைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. எனக்கு வெளியில் boyfriend இருக்குனு சொன்னதுக்கு. மூனு மாசம் தான அவனை தெரியும்னு கேக்குறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என்று கூறி இருந்தார்.அதிலும் ஐசு, நான் எதாவது சிக்கலில் சிக்கினால் என்னை வீட்டில் சேர்க்கவே மாட்டார்கள் என்று சொன்னார். ஆனாலும், வெளியில் ஒரு boy friendஐ வைத்துக்கொண்டு ஐசு இப்படி செய்து வருகிறது பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது.
இருப்பினும் இவர்கள் இருவரின் சில்மிஷம் குறையவில்லை. இவர்கள் இப்படி பேசிய சில மணி நேரத்தில் ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டனர். மேலும், ஐசுவை அனைவர் முன்பும் அலேக்காக தூக்கிகொண்டு போனார் நிக்சன். இதையெல்லாம் தாண்டி, ஐசு படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரது புருவத்தை தடவி 'உன் கண்ணு அழகாக இருக்குடி என்று வர்ணித்து பேசினார் நிக்சன். இவர்களின் இருவரின் செயல் சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
https://twitter.com/divieditz26/status/1721412361335267490
இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் Cringe தனத்தை தொடர்ந்து தான் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஐசு, வேட்டி கட்டி இருந்தார். அப்போது நிக்சன் ஐசுவை எழுப்பி என்ன வேட்டி கட்டிருக்கிறாய் என்று அவரது வேட்டியை சரி செய்தார். அப்போது வேட்டியை நகர்த்தி ஐசுவின் காலை தடவினார் நிக்சன் இதனால் பதறிய ஐசு என்ன செய்கிறாய் என்று கேட்டார். ஆனால் எதார்த்தமாக செய்தது போல நிச்சனும் மீண்டும் வேட்டியை சரி செய்தார் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ பலரும் ஐசு மற்றும் நிக்ஸனை கழுவி ஊற்றி வருகிறார்கள்




