‘இதுக்கு மணி – ரவீனாவே தேவல’ நிக்சன்,ஐசு செயலால் கழுவி ஊற்றும் ரசிகர்கள். வைரலாகும் வீடியோக்கள்.

0
676
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மீண்டும் மலர்ந்த இன்னொரு காதல் ஜோடி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. கன்னட சூப்பர் ஸ்டாரின் மகன்,

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

மணி ரவீனா காதல்:

தற்போது 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மீண்டும் ஒரு காதல் ஜோடி;

அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசுவது, ரசியம் பேசுவது என்று இருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் செய்வது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு காதல் ஜோடி பிக் பாஸ் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐசு- நிக்சன் ஜோடி தான். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஐசு- நிக்சன் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள்.

ஐசு- நிக்சன் காதல்:

முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார்.

இதெல்லாம் தாண்டி நேற்று நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு மணி – ரவீனாவே பரவாயில்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisement