என்னது ஐஸுக்கு வெளியில் ஒரு Boyfriend இருக்காரா – இதெல்லாம் பாத்தா அவர் என்ன நினைப்பார். நிக்சன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
495
Aishu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள்.அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசுவது, ரசியம் பேசுவது என்று இருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் செய்வது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு காதல் ஜோடி பிக் பாஸ் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐசு- நிக்சன் ஜோடி தான். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஐசு- நிக்சன் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள்.முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார்.

- Advertisement -

பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தன்னையும் நிக்சனையும் இணைத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவது, புதிய போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் குழப்பம் அடைந்திருக்கும் ஐஷு, இது பற்றி ஒரு வழியாக மணியிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார். “அவனைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. எனக்கு வெளியில் boyfriend இருக்குனு சொன்னதுக்கு. மூனு மாசம் தான அவனை தெரியும்னு கேக்குறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து நிக்சனைத் தனியாக அமர வைத்து, இதற்குத் தீர்வு காண ஐஷூ முடிவு செய்த ஐசு, நிக்ஸனிடம் ‘“இந்த வாரம் நான் வெளிய போயிட்டா நல்லாயிருக்கும்ன்னு தோணுது’ என்று கூறினார். இதற்கு நிக்சன் ஒரு பர்ஸனா உன்னை எனக்குப் பிடிக்கும். அதே மாதிரிதான் உனக்கும். உன்னோட கம்பெனி எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். இப்போது சொல். நீ சொன்னால் பர்ஸனலாக பேசுவதை நாம் நிறுத்திக் கொள்வோம்’ என்று கூறினார்.

“சரி ஓகே.. அப்படியே செய்வோம்” என்று ஐசு சொன்னார், இருப்பினும் இவர்கள் இருவரின் சில்மிஷம் குறையவில்லை. இவர்கள் இப்படி பேசிய சில மணி நேரத்தில் ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டனர். மேலும், ஐசுவை அனைவர் முன்பும் அலேக்காக தூக்கிகொண்டு போனார் நிக்சன். இதையெல்லாம் தாண்டி, ஐசு படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரது புருவத்தை தடவி ‘உன் கண்ணு அழகாக இருக்குடி என்று வர்ணித்து பேசினார் நிக்சன்.

ஆனால், அதை தடுக்காமல் நிக்சன் வர்ணித்ததை ரசித்தபடி படுத்துக்கொண்டு இருந்தார் ஐசு.இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்தில் நிக்ஸன் மற்றும் ஐசு ஆகி இருவருமே சிறப்பாக விளையாடியதோடு தங்கள் கருத்துக்களை சரியாக முன்வைக்கின்றனர் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி Cringe செய்து வருவதையே முழு நேர தொழிலாக பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரை பார்க்கும் போது மணி – ரவீனாவே எவ்வளவோ தேவல என்பது போல தான் எண்ணம் தோன்றுகிறது.

Advertisement