படத்திலேயே இந்த கேரக்டர் தானா – விஜய் ஆண்டனி படத்தில் நிக்சன் நடித்துள்ள காட்சி வைரல்

0
244
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பின் கடந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், கூல் சுரேஷ் வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரிதும் பரீட்சை இல்லாத நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து நன்றாக தான் விளையாடி வந்தார். பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, பெண்களைப் பற்றி தவறாக உருவ கேலி செய்வது போன்ற வேலைகள் எல்லாம் செய்திருந்தார். இதனால் இவரைக் குறித்து விமர்சனம் இருந்தது. குறிப்பாக வினுசாதேவி விஷயத்தில் இவர் பேசியிருந்தது குறித்து பலருமே கண்டித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

நிக்சன் குறித்த விமர்சனம்:

பின் இவர் ஐசுவை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு அவரிடம் நடந்து கொண்டது குறித்து விமர்சனங்கள் இருந்தது. அது மட்டுமில்லாமல் ஐசு வெளியேறியதற்கு காரணம் நிக்சன் என்றுதான் கூறியிருந்தார்கள். மேலும், நிக்சன் தேவை இல்லாமல் பிற போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபட்டிருக்கிறார். அதிலும் அர்ச்சனாவிடம் இவர் சண்டை போட்டு மிக மோசமாக பேசி இருந்தார். இதனால் கமலே அவரை கண்டித்து இருந்தார்.

நிக்சன் நடித்த படம்:

தற்போது இவர் இறுதி கட்டத்தை நோக்கி வந்திருக்கிறார். இவர் இன்னும் நீடிப்பாரா? இல்லையா? என்பதை வரும் நாட்களில் தான் பார்க்க முடியும். இப்படி இருக்கும் நிலையில் நிக்சன் நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திமிரு பிடித்தவன் என்ற படத்தில் நிக்சன் ஒரு காட்சியில் பள்ளி மாணவன் ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நீ வெளியேவே இப்படித்தானா? எல்லாம் செய்துவிட்டு தான் உள்ளே வந்து நடிக்கிறாயா என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

Advertisement