இந்த வாரம் எலிமினேஷன் இருக்கா? வெளியான செம ட்விஸ்ட்.! கேட்டா ஷாக்கவீங்க.!

0
20272
kamal
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-
sakshi los abhi

இந்த வார நாமினேஷன்படி அபிராமி, சாக்க்ஷி சரவணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். எனவே, இந்த எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் பாருங்க : தொடை தெரியும்படியான படு மாடர்ன் ஆடையில் அபர்னதி நடத்திய போட்டோ ஷூட்.! 

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் ஓட்டிங்கில் லாஸ்லியாவிற்கு தான் அதிகப்படியான ஓட்டுக்கள் விழுந்து வருகிறது. மேலும், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், நமது வலைதளத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்புகளிலும் சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

எனவே, இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி இந்த வாரம் ஏவிக்ஷன் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் சீக்ரெட் ரூமும் இந்த வாரம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-35.png

ஒருவேளை சாக்க்ஷி இந்த வாரம் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டால், அடுத்த வாரமும் அவர் காப்பாற்றப்படுவார். அதற்கு முக்கிய காரணமே இந்த வாரம் நடந்த டாஸ்கில் சாக்க்ஷி வெற்றி பெற்று அவருக்கு அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பற்றபட்டார் என்று ஏற்கனவே பிக் பாஸ் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement