இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.! தர்ஷனை கூட பண்ணிருக்காங்களே.!

By Rajkumar · 5/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

கடந்த வாரம் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதா, தாண்டி, முகென் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் வெற்றி பெற்ற மகன் இந்த வார தலைவராக இருந்து வருகிறார். அதனால் அவரை போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செய்ய இயலாது.

இதையும் பாருங்க : முகென் காதலிக்கு நேரடியா மெசேஜ் செய்த பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.! என்ன கூறியுள்ளார் பாருங்க.! 

அதேபோல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு ரகசிய அருகில் வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேறுது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இன்று நாமினேஷன் நடைபெற்றது.


Tamil Behind Talkies AMP · Quick view
View full