பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் இவர்கள் தான்.!

By Rajkumar · 8/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. கடந்த வார நாமினேஷனில் சேரன், கவின், சரவணன், சாக்க்ஷி, மீரா மீதுன், பாத்திமா பாபு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் மீரா, மது ,மோகன் வைத்யா, சரவணன், வனிதா ஆகியோர் இடம்பெறுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேஷனில் வரவில்லை.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பற்ற நீங்கள் மெசேஜ் மூலமாகவும், மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' என்ற லிங்கில் சென்றும் வாக்களிக்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full