முடிந்தது இந்த வார நாமினேஷன்.! யார் யாரை நாமினேட் செய்தார்கள் தெரியுமா.!

0
2043
bigg-boss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
cheran

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்ற விவரம் இதோ,

  • சேரன் – கவின் மற்றும் சாண்டி
  • ஷெரின் – கவின் மற்றும் லாஸ்லியா
  • சாண்டி – சேரன் மற்றும் ஷெரின்
  • லாஸ்லியா – முகென் மற்றும் ஷெரின்
  • தர்ஷன் – கவின் மற்றும் லாஸ்லியா
  • முகென் – சேரன் மற்றும் லாஸ்லியா
  • கவின் – சேரன் மற்றும் ஷெரின்

எனவே, தற்போது வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்த வாரத்தின் முடிவில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் நாமினேட் ஆனவர்களில் இருந்து வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் இனி வரும் நாமினேஷனிலிருந்து கூட தப்பித்து கொள்ளலாம்.

-விளம்பரம்-
Advertisement