தெலுங்கு நான் ஸ்டாப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி சாம்பியன் பட்டம் வென்றுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்தியில் தான் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிவடைந்திருக்கிறது.

அதேபோல் தமிழில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டிருந்தது. இதேபோல் தெலுங்கில் 24 நேரமும் நான் ஸ்டாப் பிக் பாஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது. தெலுங்கில் 75 நாட்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்றுடன் தான் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் நடிகை பிந்து மாதவி சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார்.

இதையும் பாருங்க : நெஞ்சுக்கு நீதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள் தானாம் – மேடையில் ஆரியே சொன்ன உண்மை.

Advertisement

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற பிந்து:

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு பிக்பாஸ் வரலாற்றிலேயே டைட்டில் வென்ற முதல் பெண் என்ற பெருமையும் பிந்து மாதவி பெற்றிருக்கிறார். அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும் கேடயமும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பிந்து மாதவி தமிழில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைல்ட் கார்ட் வழியாக உள்ளே கலந்து இருந்தார். இருந்தாலும் இவர் தெலுங்கு பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேலஞ்சர் என்ற பெயரில் பிந்து மாதவி நுழைந்திருந்தார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி:

அத்தனை போட்டியாளர்களுக்கும் நிஜமாகவே திறமையான, நேர்மையான, கடுமையான போட்டியாளராக பிந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர்கள் பிந்து மாதவிக்கு சூர்ப்பனகை என்ற பட்டத்தையும் வழங்கி இருந்தார்கள். இருந்தாலும் வெளியில் இருந்த அவரது ரசிகர்கள் அவருக்கு பெண் புலி என்று பெயர் சூட்டி அழைத்திருந்தார்கள். பலரும் பிந்து மாதவிக்கு ஆதரவை கொடுத்திருந்தார்கள். இப்படி கடுமையாக போராடி விளையாடி பிந்து மாதவி சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். மேலும், பரிசினை வென்ற பிறகு பிந்து மாதவி கூறியிருப்பது,

Advertisement

பிந்து மாதவி அளித்த பேட்டி:

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் பல விஷயங்களுக்கு எனக்கு குருவாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. என்னுடைய பலம், பலவீனம் இதை இங்கே தான் அறிந்து கொண்டேன். இங்கே நான் அறியாமலே செய்த என் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி இருக்கிறார். மேலும், பிந்து மாதவி வெற்றி பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பிந்து மாதவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Advertisement

பிந்து மாதவி பற்றிய தகவல்:

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம் என்று சொல்லலாம். இவர் தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஜாக்சன் துறை, கழுகு 2 போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement