நெஞ்சுக்கு நீதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள் தானாம் – மேடையில் ஆரியே சொன்ன உண்மை.

0
574
Aari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்த படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இவரை பொள்ளாச்சிக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். அப்போது அங்கு இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : நிக்கி கல்ராணியின் திருமணம் நடந்த அதே நாளில் அவரின் தங்கைக்கு நடந்த விஷயம் – ஓ, அதான் கல்யாணத்துக்கு வரலையா.

நெஞ்சுக்கு நீதி படம்:

இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தெரியவருகிறது. ஆனால், அவரை சுற்றி பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி நீதியை வாங்கி கொடுத்தாரா? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

நடிகர் ஆரி அளித்த பேட்டி:

இந்த நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூகநீதியை சரி சமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக ஜாதி அரசியல் படமல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

நெஞ்சுக்கு நீதி படம் குறித்து ஆரி சொன்னது:

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் ஜாதி இருக்கு. ஆனால், இங்கு பெயருக்கு பின்னால் ஜாதி இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் இப்படி ஜாதியை தூண்டும் வகையில் படம் எடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே ஜாதியை ஒழித்து விட்டோம். ஆனால், நம் மனதில் ஜாதி அப்படியேதான் இருக்கிறது. ஜாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம் எந்த சாதியில் பிறந்தவன் என்பது பிரச்சினை அல்ல.

நடிகர் ஆரி பற்றிய தகவல்:

ஆனால், ஜாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பார்ப்பது தான் இங்கு பிரச்சனை. அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் தான் இந்த படம் இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஆரி அர்ஜுனாவும் ஒருவர். இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆவார்.

Advertisement