இந்த சீஸனின் முதல் ஓபன் நாமினேஷன் – இவங்க ரெண்டு பேர் பேரதா அதிகம் சொல்ராங்க.

0
1582
archana

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இதுவரை மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதை விட சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கடந்த வாரம் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியது.

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட இருந்தனர். இந்தவார நோமினேஷனில் அர்ச்சனா, ஆரி, பாலாஜி, நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் போட்டியாளர்கள் 1-ல் இருந்து 13 வரை தங்களை வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடத்தில் வந்த ஆரி, பாலாஜி, அர்ச்சனா ஆகிய மூவரும் இந்த வாரம் தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த மூவரில் பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியான நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்த கமல் ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது அதுவும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement