மோடிக்கு எதிராக ட்வீட் போட்டதால் சிக்கலில் சிக்கி இருக்கிறார் நடிகை ஓவியா. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது . விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வந்தனர். பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கையில் நடிகை ஓவிய #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பிக் பாஸ் நடிகை காஜல் பசுபதியும் ஆதரவு தெரிவித்து இருந்தார். ஆனால், மோடியின் ஆதரவாளர்கள் பலரும் ஓவியாவிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : Mood என்று பதிவிட்டு கூவே கத்திரிக்காய் Emoji-யை போட்ட ஆண்ட்ரியா. கண்ட மேனிக்கு கமன்ட் செய்ததால் கேப்ஷனையே நீக்கிட்டாரு.

Advertisement

ஓவியா போட்ட #GoBackModi டீவீட்டிற்கு நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றைபோட்டிருந்தார். அதில், #வாயை_ மூடு_போடி சும்மா ரைமிங். உன்னை மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை. பிக் பாஸில் உனக்கு எதிராக தான் இருந்தேன். ஆனால், நான் சரியானதை தேர்வு செய்து இருக்கிறேன். என்று பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஓவியாவை திமுக கட்சியினர் விலைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறி பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து ஓவியா மீண்டும் ஒற்றை வார்த்தையில் மற்றொரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம்(freedomofthoughts)’ என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை கூறும், ‘ஐபேக்’ நிறுவனம், ஓவியாவை, ஒரு கோடி சம்பளம் கொடுத்து தி.மு.க., பிரசாரகியாக அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஓவியாவிற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரதமர் மோடியை குறிவைத்து நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க சீனா, இலங்கை போன்ற நாடுகள் முயற்சி செய்கின்றன. அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடிகை ஓவியா உள்ளிட்ட சிலர் செயல்படுகிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் அலெக்ஸ் சுதாகர், சி.பி.சி. ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement