'எல்லாம் சிரிப்பா இருக்கு' - மோடி அரசை ஒரே தன் ஒரே மீம் மூலம் கலாய்த்த ஓவியா.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
https://twitter.com/OviyaaSweetz/status/1385271379478548481
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.
இதையும் பாருங்க : வித விதமான கெட்டப்புகளில் மைனா நந்தினி - யோகேஷ் ஜோடி நடத்திய போட்டோ ஷூட். அதுவும் இந்த கிழவன் கெழவி கெட்டப்ப பாருங்க.
மேலும், இவருக்கு என்று சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள்.பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை.
https://twitter.com/TKToffl/status/1385297152004530180
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாகவே மோடி அரசுக்கு எதிராக ட்வீட் போட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரிடன் ட்விட்டர் வாசி ஒருவர், மோடி அரசின் செயல்பாகள் பற்றி கேட்டிருந்தார். அதற்கு தன்னுடைய மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஓவியா, அதில் 'என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
https://twitter.com/Ramkumaar2/status/1385285973760561153
ஓவியாவின் இந்த பதிவை பார்த்த பலர் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஓவியா, மோடி குறித்து பதிவிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது ட்விட்டரில் பலரும், #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் பதிவிட்டனர். அப்போதும் ஓவியா, #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.