வித விதமான கெட்டப்புகளில் மைனா நந்தினி – யோகேஷ் ஜோடி நடத்திய போட்டோ ஷூட். அதுவும் இந்த கிழவன் கெழவி கெட்டப்ப பாருங்க.

0
3950
maina
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-159-810x1024.jpg

மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் மைனா நந்தினி.

இதையும் பாருங்க : மிடில் கிளாஸ்னு சொன்னீங்க எப்படி இவ்ளோ காஸ்ட்லியான பொருள் எல்லாம் வாங்குறீங்க – ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் பதிலடி.

- Advertisement -

நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றுது. கடந்த ஆண்டு தான் மைனா நந்தினிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சீரியலில் நடிக்க வந்துவிட்டார் நந்தினி.

தற்போது யோகேஷ் – நந்தினி தம்பதியினர் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபித்தல் இவர்கள் பல விதமான கெட்டப்புகளை போட்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement