உங்களுக்கும் அமீருக்கும் கல்யாணம் முடிஞ்சத ஏன் சொல்லல – ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்.

0
419
Pavni
- Advertisement -

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக பாவனி-அமீர் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென பிக் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

அமீர் – பாவனி திருமணம் :

ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவரகளது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் காதலர் தினத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமீர் ‘‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி, ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்வோம். என்று கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் பாவனி இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கும் அமீர் அண்ணாக்கும் கல்யாணம் ஆயிட்டு இருக்கு நீங்க எதுவும் சொல்லல’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பாவனி ‘கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள் அதன் பின்னர் நாங்கள் இருவரும் இருந்து விட்டதாக சொன்னார்கள் இப்போது நாங்கள் ரகசியமாக திருமணத்தை செய்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள் அடுத்து என்ன’ என்று கூறியுள்ளார் பாவனி

Advertisement