மக்களை முட்டாளாக்கிய பிக் பாஸ்..! Phone Call டாஸ்கில் இதை கவனித்தீர்களா..? வீடியோ இதோ

0
480
Janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சென்ராயன் வெளியேற்றபட்டு ஐஸ்வர்யா காப்பற்றபட்டது தான் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவிற்கு சாதகமாகத்தான் கடந்த வாரம் போன் டாஸ்க் நடைபெற்றது என்று பல ரசிகர்களும் குறை கூறி வருகின்றனர்.

- Advertisement -

சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்தார் இருப்பினும் அவர் எப்படி காப்பற்ற பட்டார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் பிக் பாஸை பற்றியும் கடந்த வாரம் போன் டாஸ்கில் பேசிய நபர் செய்த சில தில்லு முல்லை பற்றியும் விஜய் டிவியே ஒளிபரப்பியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் fun unlimited என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஆன்று தொகுத்து வழங்குகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் fun unlimited நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போன் டாஸ்கின் போது நடைபெற்ற சில நிகழ்வுகளை கலா ய்த்துள்ளனர். மேலும், இந்த டாஸ்கின் போது மக்கள் பிரதினிதி என்று பேசிய அந்த நபர் செய்த சில பித்தளாட்டத்தையும் குறும் படமாக போட்டு களாய்த்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement