Breaking News : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் – என்ன இப்படி எளச்சி போயிட்டாரு.

0
5324
ponnambalam
- Advertisement -

பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.

-விளம்பரம்-

1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம் .அதன் பின்னர் வெற்றி விழா, இந்து ,போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இதுவரை தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் .

- Advertisement -

90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர், சினிமாவில் பல புதிய விண்ணல் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம்.பின்னர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement