இரண்டு வருட இடைவேளைக்கு பின்னர் பொன்னம்பலம் நடிக்கும் முதல் படம்.!

0
530
- Advertisement -

பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.

-விளம்பரம்-

1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம் .அதன் பின்னர் வெற்றி விழா, இந்து ,போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இதுவரை தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் . 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர், சினிமாவில் பல புதிய விண்ணல் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தற்போது இவர் ‘தேவ்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில்,நடிகர் கார்த்தி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பொன்னம்பலம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement