நிக்சு – மவீனா தொல்லையே தாங்க முடியல இப்போ இது வேறயா? – இறுக்கி கட்டியணைத்த பூர்ணிமா. அப்போ விஷ்ணு நிலைமை?

0
213
Poornima
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்னும் சில காதல் ஜோடிகள் குறித்த டிராக் தான் தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த ஏழாவது சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள்.அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசுவது, ரசியம் பேசுவது என்று இருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் செய்வது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது குறித்து சிலர் நேரடியாகவே மணி-ரவீனாவிடம் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு இருவரும், நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று மழுப்பி விட்டார்கள்.

- Advertisement -

இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் மீண்டும் ஐசு- நிக்சன் காதல் கதை அதிகமாக வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஐசு- நிக்சன் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள்.முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருக்கிறார். அதேபோல் நிக்சன், ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர்.

-விளம்பரம்-

அதற்கு பின் ஒரே தட்டில் இருவரும் சாப்பிடுவது, நிக்சன் ஐசுவை அனைவர் முன்பும் அலேக்காக தூக்கிகொண்டு போவது, ஐசு படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரது புருவத்தை தடவி ‘உன் கண்ணு அழகாக இருக்குடி என்று பேசுவது என்று பார்வையாளர்கள் எரிச்சலடையும் படி நிக்சன்-ஐஷு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் சில காதல் டிராக் சென்று கொண்டிருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, விஷ்ணு- பூர்ணிமாவை காதலிக்கிறார். ஆனால், பூர்ணிமா, விக்ரமை காதலிக்கிறார். விக்ரம், பூர்ணிமாவுடன் நெருக்கமாக பழகி இருந்தாலும் விக்ரம் அக்ஷயாவை தான் காதலிக்கிறார். தற்போது இந்த முக்கோண காதல் கதை தான் வைரலாகி வருகிறது.

Advertisement