‘எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்’ வைரலாகும் பிரதீப்பின் வீடியோ. இந்த சீசன் அசீம் இவர் தானோ ?

0
1265
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தை தொடர்பாக பிரதீப் ஆண்டனி ஓபன் ஆக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். நேற்று வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இன்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வு தொடர்பான வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ:

அந்த வீடியோவில், இந்த வார கேப்டன் விஜய் வர்மா. அவர் விஜய்யின் லியோ படத்தின் பாடல் ஆன பேட்தாஸ் பாடல் பற்றி பிற போட்டியாளர்களான அக்ஷயா உதயகுமார், ஐசு, விசித்திரா, ரவீனா உடன் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்க ரவீனா பேட் தாஸ் பாடலுக்கு அர்த்தம் புரியாமல் கெட்ட வார்த்தையா? என்று கேட்கிறார். உடனே மற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி குறுக்கே வந்து விஜய் வர்மாவிடம் கெட்ட வார்த்தை பேசிட்டீங்களா என்று கேட்க அதற்கு விஜய் வர்மா இல்லை என்று மறுத்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி சொன்னது:

உடனே பிரதீப், எனக்கு ஒரே ஃப்லோல எக்கச்சக்கமாக கெட்ட வார்த்தை வந்துவிடும். ஒருவேளை நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டால் சந்தோஷமாக இருக்கும். நான் ரொம்ப கேவலமாக பேசுவேன் என்று பேசுகிறார். இதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலருமே நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே பிரதீப் ஆண்டனி தன்னுடைய உண்மையான முகத்தை காட்டிவிட்டார். இனி தான் நிகழ்ச்சியில் ஆட்டம் சூடு பிடிக்கிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement