பிக் பாஸுக்கு பின் சினிமா வாய்ப்பை பெற்ற முதல் சீசன் 7 போட்டியாளர். செக்கை பதிவிட்டு பிரதீப் போட்ட பதிவு.

0
617
- Advertisement -

பிக் பாஸுக்கு பின் பிரதீப் கமிட் ஆகி இருக்கும் முதல் படம் குறித்து பிரதீப் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இரண்டாம் இடத்தை மணியும் முன்றாம் இடத்தை மாயாவும் பிடித்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த டாடா என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்பும் இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருந்தார்.

- Advertisement -

பிரதீப் ரெட் கார்ட் :

மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்

நெட்டிசன்கள் கருத்து:

பிரதிப்பை விட நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகிய பலருமே மோசமாக வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும்போது பிரதீப்பை எப்படி வெளியேற்றலாம் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மீண்டும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தும் பிரதீப் வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

பிரதீப் கமிட் ஆன படம் :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் பிரதீப் முதல் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்த வருடம் கொஞ்சம் நடிச்சு காசு சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிட்டேன். படம் பொருமையாதான் வரும்..எப்போ வரும்லாம் கேக்காதீங்க..வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் எவ்வளவு :

பிரதீப் ஆண்டனி, தனக்கு அட்வான்ஸாக வழங்கப்பட்ட செக்கை வீீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த காசோலையில் ரூ.9 லட்சம் என எழுதப்பட்டுள்ளது. இவரு முழு சம்பளம், 15 லட்சம் வரை இருக்கலாட் என கூறப்படுகிறது. பிரதீப் பதிவிட்ட இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் 7ற்கு பின் படத்தில் கமிட் ஆன முதல் போட்டியாளர் பிரதீப் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement