சமூக வலைத்தளத்தில் எனக்கு கிடைத்த ஆதரவை பார்த்த போது – வடிவேலு வீடியோவை பகிர்ந்த பிரதீப். ரெட் கார்ட் வங்கியும் மாறாத குசும்பு.

0
394
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் சீசன் ஒன்றில் பரணி துவங்கி இந்த சீசனில் பாவா செல்லதுரை வரை நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார் பிரதீப்.

-விளம்பரம்-

இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

இருப்பினும் பிரதீபால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே மாயா மற்றும் அவரது குழுவினரின் வாதமாக இருந்தது. இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள் இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதே போல பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பஸில் இருந்து வெளியேறிய பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸில் வென்ற சில ஸ்டார்களையும், பேட்ச்களையும் பதிவிட்டு என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

அதே போல மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ள பிரதீப், வடிவேலு காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்து ‘என்னுடைய விளையாட்டிற்கு சமூக வலைதளத்தில் கிடைத்த வரவேற்பை கண்டு எனக்கு இப்படி தான் இருந்தது. கூட நின்னதுக்கு நன்றி, என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆர்ட்டிஸட்டாக ஆக முயற்சி பண்றேன். நல்லா இருங்க, அடுத்த வேலைய பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார் .

Advertisement